உன்னுடனான முதல் சந்திப்பு.
பார்த்ததும் பிடித்துப்போன பந்தம், அந்த வினாடியில் தொடங்கிய பயணமும் கூட.
அன்று முதல் ரயில் பயணங்களில் சங்கீதமான உனது ராகங்கள்.
உன்னுடன் தொடர்ந்த ஜன்னல்லோரப் பயணங்கள், தூக்கம் தொலைத்த இரவுகள், தொடர் வண்டியான சந்திப்புகள் என விரியும் நமது வட்டம்.
இதற்கிடையில் நமக்கு நாமே
பேசிக்கொண்ட பேச்சுகள், சிரிப்புகள், உளரல்கள் என நீளும் ஞாபகங்ள் வேறு.

இப்படியே அல்லது எப்படியோ எட்டு மாத பயணத்திற்குப் பிறகு சொந்தமான பந்தம்.
பேச மறுக்கும் சுவர்கள், உரசலை உரக்கச் சொன்ன ஜன்னல்கள்.
ஒடப் பழகிய வாழ்க்கை, ஓய்வில்லாத ஓட்டம், போராடி ஜெயித்த தருணங்கள், கஷ்டத்திலும் சிரிக்க கற்றுக் கொண்ட உதடுகள் என்றானது நமது வாழ்க்கை.
வாழ்க பல்லாண்டு வளர்க என்னோடு.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.