Sunday, October 14, 2018

காதல்

நகராத மணித்துளிகள்

ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி

கனவுகளில் கரையும் நினைவுகள்

உறக்கம் தொலைத்த இதயத்தில்

உனக்காக கர்வத்துடன்

தழைக்கும் காதல்...


கருமி


என்னில் சேமித்த 

உந்தன் ஞாபகத்தை

விரயம் செய்யும்போது

கருமியாகி விடுகிறேன்...

தோள்சாயும் நீ



மலரும் நிலவை

தாங்கிப் பிடிக்க - வானம்

மயங்கிய நிழலைத்

தூக்கிப் பிடிக்க - பூமி

அழகாய் பதப்படுத்தப்பட்டு

உறைந்து போன

காதலோடு

என் தோள்சாயும்

நீ...

பயணம்




ஒரிரு நொடிகளில்

தவறவிட்ட இரயில் பயணம்

கணத்த இதயத்துடன்

ஊரரத் தொடங்கியது

நானில்லாமல்...

Saturday, September 29, 2018

ஓவியமாய் நிலா(நீ)

பரந்து விரிந்த வானத்தில்

தீட்டப்பட்ட ஓவியமாய்

நிலா

போதாதென்று

பூவியிலும் வரைந்து

விட்டான் போலும்

உன்னை...

நீயில்லால்



எனக்கொன்றும் காத்திருப்பது

புதிதல்ல - இதயமும் பழகிக்கொன்டது

ஆனால் நீயில்லால்

மணித்துளிகள்

மரணத்திக்

கொண்டிருக்கின்றன


Monday, September 24, 2018

இப்படி இருக்குமாயின்




மேகங்கள் இல்லாத வானம் !

சூரியன் இல்லாத விடியல் !

நிலவில்லாத இரவுகள் !

இவைகளின் வரிசையில்

நீ இல்லாத நான்


அந்த நிமிடங்கள்


மறைந்தும் மறையாத சூரீயன்


இளைப்பாறும் விளக்குகள்


காலியான இருக்கைகள்


மணக்கும் தேநீர் கோப்பைகள்


பரிமாறிய உணர்வுகள்


மௌனமான பார்வைகள்


கவிபாடிய உதடுகளாய்


கரைந்த நிமிடங்கள்...


நீயில்லா நிமிடங்கள்

நிஜம் என்பதை மறுக்கும்

நீயில்லா நிமிடங்கள்

என்னுடன் உறங்கி

என்னுடனே பவனிவரும்

உந்தன் நினைவுகளுடன்

என்றுமே களைப்படையா

இதயம்...


கவிதை

என்னவள்

அனுதினமும்

புதுப்பொழிவுடன்

என்னுள் கவிதையாய்

பூத்துக் கொண்டிருக்கிறாள்...


தவம்

உனக்காக

அதிகாலை வரை

தவம் கிடக்கிறேன்

உன்

உறக்க கலக்கத்தின்

உலரல்களின் இசைக்காக...

அழும் மேகம்

உன்னை

நினைத்து

ஓங்கி

அழுது

கொண்டிருக்கும்

மேகம்...


கடல் அலை

நித்தமமும் ஞாபகமாய்

பிரிய மனமின்றி

கண்ணீரால் கடற்கரையை

காதல் கொள்ளும்

கடல் அலை...


இயற்கை

ஒருபுறம் அமைதியாய்

உறங்கிக் கொண்டிருக்கும்

மலை - மறுபுறம்

ஆர்ப்பரிக்கும் அலையென

கொஞ்சி விளையாடும்

இயற்கை...


கற்சிலை




உனக்காக

காத்திருந்து

காதல் கொள்ளும்

கற்சிலை!..


உதடுபடா தேநீர்

உலகத்தில் பாவப்பட்ட

ஜீவன்களின் வரிசையில்

இப்பொழுது

உன் உதடுபடா

தேநீரும்!...


தேடல்

விண்மீன்களின் வெளிச்சத்தில்

அழகான

இரவுகளின் அரவணைப்பில்

தொலைந்து போன

நிலவைத் தேடிக்கொண்டிருக்கிறேன்...



பயணம்

உள் வாங்கிய

சுவாசமும்

உன்னைத் தேடியே

பயணிக்கிறது !

இதயத்தினுள்

நீ

படர்ந்திருப்பாயென்று...



தண்டவாளம்

பிரிந்தே

இருந்தாலும்

இணைந்தே செல்லும்

தண்டவாளம்

என்றுமே அழகுதான்...


புலம்பும் நட்சத்திரம்

நிலா(நீ)

அருகிலிருந்தும்

நேரம் போதவில்லை

எனப் புலம்பும்

நட்சத்திரம்... நான்


காதல் மேகம்

வெட்கத்தில் ஒளிய

மேகம் தேடிக்கொண்டிருக்கும்

நிலா(நீ)...

போதும் - உறங்கும்

இரவுகளை எழுப்ப

அதிகாலைச் சூரியனை

அனுப்பி விடு...

அவளும் காதல்

மேகத்தில் கரையட்டும்...


காலடிச்சுவடு

இதயத்தில்

பசுமையான நினைவுகளைப்

படரவிட்டு - உன்

காலடிச்சுவடுகளை

மட்டும் அழிப்பதேனோ ???


விதி நீ

நான்

விரும்பி

வாசித்த விதி

நீ

காதல்

வானம் கொண்ட காதலால்

உதிர்ந்த மழைத்துளிகளின்

உணர்வுகளுக்கு

இங்கு ஏங்கிய

ரோஜாக்கள்தான் அதிகம்...


மீழாத் துயரங்கள்

எந்தன்

மீழாத் துயரங்கள்

யாவும் - நீயில்லாமல்

மரணித்த மணித்துளிகளே

-இங்கனம்

உன் நினைவலைகளில்

துவண்டு துடித்துக்

கொண்டிருக்கும்

ஓர் இதயம்...


உதிர்வது உணர்வுகள்

உதிர்வது பூக்கள்

மட்டுமல்ல


மென்மையான உணர்வுகளோடு


உறவுகளும்...


தனிமை

என்

உறக்கம் தொலைத்த

நிலவோ - தனிமையில்

சிறகு ஒடிந்து

வாடிக் கொண்டிருக்கிறது...

கருவிழி சுழல்

உன் 

கருவிழி சுழலிலும்

கண் இமை

அசைவிழும்

மயங்கிய மலர்களும்

ஏங்கியே

மாண்டு போகிறது ...



தன்மானம்

தன்மானத்தோடு வாழ்ந்துவிடு தமிழா

போர்க்குணம் கொண்ட இனமே

போட்டி கானச் சென்றுவிடாதே

உன்னில்லம் துயரத்தில் இருக்கும்போது

கொண்டாத்தில் ஈடுபட்டு

குமுறலை வாங்கிக் கொள்ளாதே ?

விளையாட்டுதானே என்று

வினை விதைத்து விடாதே!

சிலகாலம் புறக்கணிப்பதால்

நீயொன்றும் புறம்

தள்ளிவிடமாட்டாய்...


உறையும் இரவுகள்

காதல் சூடேற்றும் சூரியன்

அதிலோ-அதற்காகவோ உருகும் நிலா

வெட்கத்தில் கண்சிமட்டும் நட்சத்திரங்கள்

இதனோடு உறையும் இரவுகள்...

இவற்றோடு - நீவருவாயென

விடியாத பொழுதுகளோடு

அழையாத விருந்தாளியாக

உறவாடிக் கொண்டிருக்கிறேன்!


நீ

நாள்தோறும் மழை நனைக்கப்

பிடிக்கும் - நீ

கைக்கோர்த்து வருவாயெனின்...

நிலவுதேய உறக்கம் தொலைக்கப்

பிடிக்கும் - நீ

இடைவிடாது இம்சிப்பாயென்றால்...

ஓயாத உதடுகள்

பிடிக்கும் - நீ

மொழிமறந்து பிதற்றுவாயெனின்...


நீயில்லாக் காலம்

தேவதையே

உனது அருமைகளை

பிரிவுகள் தான்

காட்டிச்செல்லும் என்கிறாய்

காட்டியா செல்கிறது?

வாட்டியல்லவா வதைக்கிறது...

நீயில்லாக் கடந்து போகும்

ஓவ்வொரு மனித்துளியும்

என் வாழ்நாளில்

பறிக்கப்பட்ட வசந்த காலமே! ...


ரசணையுடன்...

உறங்கியது போதுமென்று

உன் நித்திரையை கலைத்தெறிய

ஆசைதான் - ஆனால்

உறங்குவது

தோள்மீதென்பதாலோ

நாவும் உணர்விழந்து

ரசிக்கிறது...


ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு என்பது

நிலங்களுக்கு

மட்டுமல்ல - நீ

கைகப்படுத்திய என்

இதயத்துக்கும்தான்...


பயணம்

ஆதவனை எழுப்பிட ஒரு அதிகாலைப் பயணம்

பனித்துகள்களாய் பயணத்தை வரவேற்ற மழை

சேறும் சகதியில் ஆரவாரமற்ற மலைப் பணம்

இயற்கையோடு ஒன்றிவிட்டதாய் ஏதோ உணர்வு


மனதை நெருடியது...

தவறுகளுக்கும்

பாவங்களுக்கும் தண்டிக்ப் படுவோமெனில்

குறைகளோடும்

கவலைகலோடும் துன்பத்தோடும்

படைத்தவன் மட்டும்

துதிக்கப்படுபவனா?


மரணம்



தாங்கிப் பிடிக்க

நீயில்லை என்பதால் என்னவோ

மரணம் என்றறிந்தும்

பயணித்து விட்டுப்

போகிறது

கொட்டும் மழை!



அத்தியாயம்

வந்து வாட்டிப் போகும்

உன் முகம்!

எல்லாம் இருந்தும்

ஏதோ இல்லாமல் உணர்கிறேன்!

ஒருமொறை தவற விட்டதற்காக

ஓராயிரமுறை புழுங்கிக்

கொண்டிருக்கிறேன்!

மீண்டும் ஒரு அத்தியாயமாய்

என்னோடு வந்துவிடு...

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...