ஆயிரம் நட்சத்திரங்கள் கூடினாலும்
நிலா(நீ) ஆகாது !
நீயில்லாமல் ரணமாய் துடிக்கும்
உன்னுடனே மட்டுமே
பேசிப் பழகிய இதயம் !
இரவெல்லாம் எதையோ
தேடிக் கொண்டிருக்கிறேன் !
உறக்கங்கள் கூட
உளரல்களாகவே வந்து போகிறது !
நீயில்லாமல் ஒவ்வொரு வினாடியும்
அத்தியாயமாய் கழிகிறது !
கானல் நீராய் வந்து
போகும் உனது பிம்பங்கள் !
காத்துக் கொண்டிருக்கிறேன் விடியலாவது
உன்னோடு இருக்கட்டும் என்ற
நம்பிக்கையில்…
No comments:
Post a Comment