Saturday, September 23, 2017

தவமாய்

மென்மையான தென்றல்

மறையத் தொடங்கும் சூரியன்

எட்டிப் பார்க்கும் நிலா

இம்சிக்கும் ஞாபகங்கள்

மீண்டும்

என்னோடு காத்திருக்கும்

தேநீர்க் கோப்பைகள் !

உனது வருகைக்காக...


Monday, September 18, 2017

மாலைப்பொழுது

அலைமோதும் மேகம்

ஆர்பரிக்கும் காற்று

அழும் வானம்

அணைக்கும் நிலம்

இப்படிக்கு

ரம்மியமான மாலைப்பொழுது...


கல்கியின் சோலைமலை இளவரசி பற்றி...

கதையைப் பற்றியோ கல்கியைப் பற்றியியோ விமர்சிக்க யாராலும் முடியாது என்பதை ஆணித்தரமாக நிருபித்துக் காட்டியுள்ளார். 

கதைக்கருவை களமாய் கையாண்டிருக்கிறார். கற்பனை வளத்தை வாரித் தெளித்திருக்கிறார் என்பதை விட கொட்டியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. 

சோலை மலையின் அழகையும் முருகனையும் அருளையும் ஆழமாய் சித்தரித்துள்ளார். சுதந்திர இந்தியாவிற்கு முன்னாள் இருந்து கதை ஆரம்பிக்கிறது. 

விடுதலைக் காற்றின் சுவாசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார். 1942 ல் ஆரம்பிக்கிற கதையை பாண்டிய மன்னனோடு இணைத்த விதம் அருமை. உண்மையில் அவர் ஒரு ஆஸ்கார் நாயகனே. 

கதையை முடித்த இடம் அதனை விட ஆச்சரியத்துக் உள்ளானது.


கண்மை

அழுகும் சுதந்திரத்தையும் 

அழகாகப் பறித்து விடுகிறது ... 


கண்மை



ரசணையாய்

குளிர்சாதனப் பெட்டியில் 

குளிரூட்டப்பட்ட குற்றாலமாய் 

கோவை

சரிகமப பாடும் சாரல்

எறும்பாய் ஊறும் போக்குவரத்து

தொடரும் இரண்டு நிமிடப் பயணம்

பண்பலை கீதமாய் என்னவள் ...

ஞாயிறு

சிறிய நடைப்பயிற்சி

நாளேட்டில் நாட்டு நடப்பு

கறி சாப்பாடு

குட்டீஸ்சுடன் நீச்சல்

வேப்பமரத்து நிழல்

இயந்திர வாழ்க்கைக்கு நடுவே

வேடந்தாங்கள் அனுபவம்


விவசாயி...

வானம் பொய்த்து விட்டதால் 

இயற்கையிடம் ஏமாறுகிறான்

வியாபாறியாய் தோற்கிறான்

அரசியலால் வஞ்சிக்கப்படுகிறான்

ஆனால் எப்பொழுதும் 

மனிதனாய் 

வென்றே நிற்கிறான்


ஒரு ரசிகனாய் - பாகுபலி

ஒரு சாம்ராஜ்ஜியத்தில் இருந்து திரும்பி வந்த உணர்வுபூர்வ ஆணவம்

கம்பீரமாய் காதல்

வஞ்சிக்கத் துடிக்கும் துரோகம்

சொந்தம் தாண்டிய பந்தங்கள்

அரவணைக்கும் இயற்கை

ஆவணம் செய்யப்பட வேண்டிய படம்.

பெண்(எ)மழையாய்...

எதுகை மோனை தெரிந்த இலக்கணமே

கற்பனைக்கு அப்பாற்பட்ட கவிதையே

தூக்கம் தொலைத்தவளே

நீ என்னில் களவாடிய பொழுதுகள்தான் எத்தனை எத்தனை

தொலைத்தவன் புலம்மிக் கொண்டிருக்கிறான்

திருப்பி் வந்துவிடு

சோனை இல்லையெனின்

தூறலாவது தந்துவிட்டுப் போ


ரசிகனின் குரலாய்...

கவிழ்ந்து கிடக்கும் வானம்

தீண்டும் தென்றல்


உறங்க மறந்த நட்சத்திரங்கள்


முழுமதியாய் என்னவள்


என்றென்றும் ரசிகனாய் நான்...


என் உலகம்...

புதைந்து கொண்டேயிருக்கிறாய் என்னுள்

தோழியாய் காதலியாய் மனைவியாய்

கனவுலகத்தில் கால்பதித்து விடு

விந்தையாய் தோன்றும் என் விசித்திர உலகம்

ஆனால் விசாலமானது,

கனவுகளை மீட்டெடுக்க

சுமைகளாக சுகங்களாக்க

திறந்தே இருக்கும் கதவுகள்

உன் வருகைக்காக

நிலா(நீ)


இம்சிக்கும் தனிமை

நினைவுகளில் மிதக்கும் இதயம்

ததும்பும் காதல்

உறக்கம் தொலைத்த நிலா(நீ)


தனிமை...


பிரிவுகள் சாபம் என்றால்

அப்படிப்பட்ட வரங்ள் தேவையில்லை

இப்படிக்குத் தனிமை

நீ(ழல்) இல்லாமல்....

நீ(ழல்) இல்லாமல்

சுற்றித்திரியும் வெண் மேகம்

வருடும் தென்றல்

வாட்டும் குளிர்

ரணமான இதயம்

நிசப்தமான தனிமை

உந்தன் பிம்பங்கள் மட்டும் ஞாபங்களாய்!

உனக்காக

என்னவளே!

நீ

ஆயிரம் மைல்கலுக்கு அப்பால்

உறங்கிக் கொண்டிருக்கிறாய் !

உணர்வுகளைத் தொலைத்த என்

இதயமோ இயந்திரமாய்

துடித்துக் கொண்டிருக்கிது

தன்னை மறந்து...




எப்படிச் சொல்வேன் உனக்கு....

எப்படிச் சொல்வேன் உனக்கு....

மறந்துவிட்டேன் என்றென்னி

கனவுகளில் வந்து போகிறாயோ !

அடிப் பைத்தியமே, நீ

எந்நாளும் ஆழ்மனத்தில் பதிந்த

காதலியென்று...

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...