நான் ஊர் சுற்ற என்றுமே ஆசை பட்டதில்லை
உங்களை மட்டுமே சுற்றி வர கனவு கண்டேன்
ஏனென்றால் உங்களை உலகம் என்று நம்பியதால் !
நீங்களோ நான் பழிங்கு சிலையானதாய் பார்க்கிறீர்கள்
ஆனால் என்னைச் செதுக்கிய உளியாய் உங்களை பார்க்கிறேன் !
கண்களும் கலங்கி விடும் எங்களுக்காக நீங்கள்
ஓடாய் உழைத்து தேய்ந்ததை நினைக்கையில் !
எங்களை அடித்து வளர்த்த நீங்கள்
அணைத்து வளர்க்க தவறியதில்லை என்றுமே !
உங்களின் நிழல் பட்டு வளர்ந்ததால் என்னமோ
எங்களை என்றுமே கட்டுப்படுதியது இல்லை நீங்கள் !
இது எங்களுக்காகவே இன்னும் உழைத்து கொண்டிருக்கும்
ஒரு உன்னத மனிதனுக்காக …
No comments:
Post a Comment