Monday, September 01, 2014

விடியலை நோக்கி

ஆயிரம் நட்சத்திரங்கள் கூடினாலும்

நிலா(நீ) ஆகாது !

நீயில்லாமல் ரணமாய் துடிக்கும்

உன்னுடனே மட்டுமே

பேசிப் பழகிய இதயம் !

இரவெல்லாம் எதையோ

தேடிக் கொண்டிருக்கிறேன் !

உறக்கங்கள் கூட

உளரல்களாகவே வந்து போகிறது !

நீயில்லாமல் ஒவ்வொரு வினாடியும்

அத்தியாயமாய் கழிகிறது !

கானல் நீராய் வந்து

போகும் உனது பிம்பங்கள் !

காத்துக் கொண்டிருக்கிறேன் விடியலாவது

உன்னோடு இருக்கட்டும் என்ற

நம்பிக்கையில்…



Tuesday, February 11, 2014

காதல் மாதம் – பிப்ரவரி

வருடம் முழுவதும் உன்மீது

காதல் கொண்டிருந்தாலும் 

பிப்ரவரி மட்டும்  ஏனோ

குதூகலத்தையே தருகிறது

ஏன்னென்றால் அன்றாவது

உன்னுள் காதல் மலர்

பூக்காதா என்று !…

இந்தக் மாதத்தில் காற்று கூட

கணமாய் காதலை சுமந்தே செல்கிறது !

இன்னும் காத்துக்  கொண்டு இருக்கிறேன்

காற்றின் சுமை இறக்கி

உன்காதல் சுமை சுமக்க !…

உனக்காக என்பதால் என்னவோ

சுமைகள் கூட சுகமாய் சுமக்கிறது !…

Wednesday, February 05, 2014

வாடா மலர்

நேற்று மலர்ந்த ரோஜாக்கள்

மெச்சிக்கொண்டன

அதன் மென்மையைப் பற்றி…

பாவம் மறந்து விட்டனவோ

என்னவோ உனது உதடுகளை !

காலையில் மலர்ந்ததற்கே நிமிர்ந்து 

நிற்கின்றன கர்வத்துடன்…

பாவம் நீ என்றும் வாடா மலர்

என்று அறியாமல் !

பறித்தது கூடத்  தெரியாமல்

எள்ளி நகையாடிக் கொண்டன…

அதனைப் பறித்தது

நீ என்பதால் !…


காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...