பூமியை அழித்தது போதாதுயென்று
புறப்பட்டு விட்டான் செவ்வாய்க்கு
புண்ணியமாய் போகட்டும் அதையாவது
விட்டுவிடு பிழைத்துக் கொள்ளட்டும்!
விஞ்ஞானத்தின் விண்ணைத் தொடும்
விஸ்வரூப வளர்ச்சிக்கு விலையாய் கொடுத்தது
என்னமோ விலைமதிப்பில்லா உயிர்களை !
பிறர் தலைமுறை அழித்து நம் தலைமுறை
தழைக்க வெறிகொண்டு அழைந்தோம்
வெற்றியும் கண்டோம் இலவச இணைப்பாய்
பெற்றோம் இயற்கையின் பகையையும் !
மரங்களை வெட்டி வெட்டி மனிதர்களை
வெட்ட பழகிக் கொண்டோம்
காலம் கடந்து உணர்வாய் அப்பொழுது
பூமியும் சுடுகாடாய் போயிருக்கும் !
காடுகளை அழித்து விலங்குகளை
வீதியில் ஓடவிட்ட நாம்
வீதியில் ஓடும் நாள் வெகுதூரம் இல்லை !
மானிடம் மட்டும் போதாது இப்புவியினில்
வாழ என்ற மாற்றம் வேண்டும் !
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை
உணர்ந்து பசுமை உலகம் படைத்திடுவோம்
இயற்கையின் பாசத்தை பெற்றிடுவோம் !
புறப்பட்டு விட்டான் செவ்வாய்க்கு
புண்ணியமாய் போகட்டும் அதையாவது
விட்டுவிடு பிழைத்துக் கொள்ளட்டும்!
விஞ்ஞானத்தின் விண்ணைத் தொடும்
விஸ்வரூப வளர்ச்சிக்கு விலையாய் கொடுத்தது
என்னமோ விலைமதிப்பில்லா உயிர்களை !
பிறர் தலைமுறை அழித்து நம் தலைமுறை
தழைக்க வெறிகொண்டு அழைந்தோம்
வெற்றியும் கண்டோம் இலவச இணைப்பாய்
பெற்றோம் இயற்கையின் பகையையும் !
மரங்களை வெட்டி வெட்டி மனிதர்களை
வெட்ட பழகிக் கொண்டோம்
காலம் கடந்து உணர்வாய் அப்பொழுது
பூமியும் சுடுகாடாய் போயிருக்கும் !
காடுகளை அழித்து விலங்குகளை
வீதியில் ஓடவிட்ட நாம்
வீதியில் ஓடும் நாள் வெகுதூரம் இல்லை !
மானிடம் மட்டும் போதாது இப்புவியினில்
வாழ என்ற மாற்றம் வேண்டும் !
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை
உணர்ந்து பசுமை உலகம் படைத்திடுவோம்
இயற்கையின் பாசத்தை பெற்றிடுவோம் !
No comments:
Post a Comment