Tuesday, October 08, 2013

கோலங்கள்


வானம் நட்சத்திரங்களால்

நிரம்பி வழிகின்றன !

போதும் நிறுத்திவிடு

தினமும் நீ

புள்ளி வைத்து

கோலம் போடுவதை …

Monday, September 02, 2013

உனக்காக துடிக்கும் இதயம்

என்னுடன் பேசும்போது  உன் கண்களும்

என்னை ஊமையாக்கப் பார்க்கின்றன !

தூரத்தில் அசையும் உன் 

 உதடுகளுக்கு என் உளறல்கள்

சுருதி சேர்த்துக் கொண்டிருக்கின்றன !

உன் நிழல்கூட என்னை தடுமாற வைக்கிறது !  

இதயம் உள்ளே துடிக்கிறதா வெளியே 

துடிக்கிறதா என்று  தெரியாது

ஆனால் அது உனக்காகத்தான்  துடிக்கிறது !


Monday, June 17, 2013

தந்தைக்காக

நான் ஊர் சுற்ற என்றுமே ஆசை பட்டதில்லை

உங்களை மட்டுமே சுற்றி வர கனவு கண்டேன்

ஏனென்றால் உங்களை உலகம் என்று நம்பியதால் !


நீங்களோ நான் பழிங்கு சிலையானதாய் பார்க்கிறீர்கள்

ஆனால் என்னைச் செதுக்கிய உளியாய் உங்களை பார்க்கிறேன் !


கண்களும் கலங்கி விடும் எங்களுக்காக நீங்கள்

ஓடாய் உழைத்து தேய்ந்ததை நினைக்கையில் !


எங்களை அடித்து வளர்த்த நீங்கள்

அணைத்து வளர்க்க தவறியதில்லை என்றுமே !


உங்களின் நிழல் பட்டு வளர்ந்ததால் என்னமோ

எங்களை என்றுமே கட்டுப்படுதியது இல்லை நீங்கள் !


இது எங்களுக்காகவே இன்னும் உழைத்து கொண்டிருக்கும்

ஒரு உன்னத மனிதனுக்காக …




படித்ததில் பிடித்து : மூன்றாம் உலகப் போர்

எவ்வளவோ புத்தகங்களை வாசித்து இருந்தாலும் மூன்றாம் உலகப் போர்புத்தகம் ஒரு சிறு தாக்கத்தை உண்டாக்கியது என்றால் அது மிகையல்ல.

நாட்டின் முதுகெலும்பான விவசாயம் தேய்ந்து கொண்டு இருக்குகிறது என்பதை மறுக்காமல் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம்.

இந்த நாட்டில் பல கருத்தமாயிகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்

மூன்றாம் உலகப் போர் என்றோ ஆரம்பித்து விட்டது என்பது தான் நிசத்தமான உண்மை. இது மனிதனுக்கும் இயற்க்கைக்கும் நடக்கும் போர்.

இப்புத்தகத்தை வாசித்த பிறகு நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதை நினைத்து கர்வம் கொள்ளவே ஆசைப்படுகிறேன்.

விவசாயம் மனிதனால் தான் அழிந்து கொண்டு இருக்குகிறது என்பதை தெளிவாக விளக்கி இருக்குகிறார் வைரமுத்து.

விளைச்சல் என்ற போர்வையில் விஷத்தை(பூச்சிக் கொல்லிகளை) மென்று தின்று கொண்டு இருக்கிறோம் என்பதை தெரியாமல் விழுங்கி  வருகிறோம்.

கடைகளில் பிளாஸ்டிக் பைகளை கேட்டு வாங்கி மண்ணை மக்கா பொருளாய் மாற்றி வருகிறோம்நுண்நுயிரிகளான விவசாயத்தின் ஆணிவேறை அழித்து விவசாயிகளின் மரணத்தில் நமக்கும் கணிசமான பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

நம் அனைவராலும் விவசாயத்தின் வளர்ச்சியில் பங்கு பெற முடியும். முடிந்த வரை பிளாஸ்டிக் இல்லா உலகம் படைப்போம் நாமும் வளர்ச்சியில் பங்கு பெறுவோம் கார்பன் இல்லா உலகம் படைத்து நம் தலைமுறை காப்போம்.

Tuesday, May 21, 2013

தீதும் நன்றும் பிறர்தர வாரா

பூமியை அழித்தது போதாதுயென்று

புறப்பட்டு விட்டான் செவ்வாய்க்கு  

புண்ணியமாய் போகட்டும் அதையாவது 

விட்டுவிடு பிழைத்துக் கொள்ளட்டும்! 


விஞ்ஞானத்தின் விண்ணைத் தொடும் 

விஸ்வரூப வளர்ச்சிக்கு விலையாய் கொடுத்தது 

என்னமோ விலைமதிப்பில்லா  உயிர்களை !


பிறர் தலைமுறை அழித்து நம் தலைமுறை  

தழைக்க  வெறிகொண்டு அழைந்தோம்

வெற்றியும் கண்டோம் இலவச இணைப்பாய் 

பெற்றோம் இயற்கையின் பகையையும் !


மரங்களை வெட்டி வெட்டி மனிதர்களை 

 வெட்ட பழகிக் கொண்டோம்

காலம் கடந்து உணர்வாய் அப்பொழுது 

பூமியும் சுடுகாடாய் போயிருக்கும் !


காடுகளை அழித்து விலங்குகளை 

வீதியில் ஓடவிட்ட நாம் 

வீதியில் ஓடும் நாள் வெகுதூரம் இல்லை !


மானிடம் மட்டும் போதாது இப்புவியினில்

வாழ என்ற மாற்றம் வேண்டும் ! 


தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை 

உணர்ந்து பசுமை உலகம் படைத்திடுவோம் 

இயற்கையின் பாசத்தை பெற்றிடுவோம் !



Wednesday, May 15, 2013

ஒருமுறையேனும் உணர்வாயா

எப்படிப் புரிய வைப்பேன்

உருவம் நான் நிழல்  நீயென்று !

எப்படி உணர்த்துவேன் உனக்கு

வழித் தடங்களிலும் உன் பிம்பங்களையே 

தேடிக் அலைகிறேன் என்று !

எப்பொழுது புரிந்து கொள்வாய்

உடல் நான் உயிர் நீயென்று !

மறுக்காமல் கொடுத்து விடு

மரணத்தை மட்டும் உன் மடியில் !...

Friday, May 10, 2013

முதன் முதலாய் கண்ட நிகழ்வுகள்

தொலைவில் 

கண்ட உனது உருவம் ! 

நாணத்தின் உச்சத்தில் பூமியின் 

தலைகோதும் உனது பாதங்கள் ! 

கண்களைச் சுண்டி இழுக்கும் 

நாட்டியப் பார்வை !

குரலுக்கு ஏற்ப நயம் பிடித்து 

ஆடும் வீணை விரல்கள் !

மரணத்தின் பிடியில்  கூட பார்க்கத்

துடிக்கும் வசீகரமான சிரிப்பு ! 

அனைத்தும் முதல் பார்வையின்

அகலாத நினைவுகளாய் !…


Monday, April 29, 2013

உன் காதலுக்காக

ரோஜா மலரே ! 

சுவாசிப்பது என் மூச்சுக்காற்றை ! 

சுவைப்பது என் வளத்தை ! 

இளைப்பாருவது என்மீது !

காதல் வேருன்றி நிற்பதும்  என்மீது !

இப்படித் தாலாட்டிய என்னை 

தவணை முறையில் உருஞ்சி விட்டு !

தவம் கிடக்க வைத்து விட்டாயே

உன் காதலுக்காக ! ...


Monday, March 18, 2013

ரம்மியமான பயணம்

அதிகாலை நேரத்துப் பேருந்து பயணம் !

சில நிமிடங்களில் விழித்துக்

கொள்ளத் துடிக்கும் சூரியன் !

அமைதியான பாரமற்ற சாலைகள் !

குளிரை வாரி இறைக்கும் தென்றல் !

தென்றலுக்கு ஏட்ப இசையும் கேசம் !

பண்பலையில் ஒலிக்கும் காதல் கீதங்கள் !

கண்கள் பேசும் மௌன ராகம் !

என்னவளோடு

ஒரு ரம்மியமான பயணம் ! 


Tuesday, February 05, 2013

நிழலாய் நீயெனக்கு...

கண்பேசும் மொழிக்காகவே 

வீழத் துடிக்கும் இதயம் !

மௌனமே பதிலாயினும்   

தொடரத் துடிக்கும் உதடுகள் !

கைகோர்க்கவே நினைக்கும் 

எனது காதல் கரங்கள் !

காலடிச் சுவடுகளையே

தேடித் தொடரும் பாதங்கள் !

நிலவாயினும் மலராயினும்

உன் நிழல் கண்டு  

வாழ போதுமடி நீயெனக்கு !...


காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...