Wednesday, December 12, 2012

மார்கழிப் பூவே



அதிகாலைப்  பனி

நடுங்கும் குளிர்

நித்திரை நிலா

கலைந்த கேசங்கள்

கசங்கிய ஆடையில்

மயக்கும் மார்கழி மலராய்

என்னவள் !...

Friday, December 07, 2012

தனிமையில் நான்

உன் கரம் பிடித்தே சாலையை

கடந்த பாதங்கள் நீயில்லாமல்

தயங்கியே கடக்கின்றன தனிமையில் !

உன் தோள் சாய்ந்தே

கண்ட உறக்கமும் நீயில்லாமல்

கலைந்தே போகிறது கவலையுடன் !

தினமும் உன் குரல் கேட்டே

விழிக்கும் அலைபேசியும் நீயில்லாமல்

காத்தே கிடக்கிறது மவுனமாய் !

காதல் வேர்களை படரவிட்டு

என் உணர்வுகளை மட்டும்

தனிமையில் தவிக்க விடுவதேனோ !





Monday, December 03, 2012

காவு

சோலைவனத்தை

பாலைவனம் ஆக்கினாள் ! 


தேன்கூட்டை

வெறும்கூடு ஆக்கிவிட்டாள் ! 

மனிதனை

மிருகம் ஆக்கிவிட்டாள் ! 

இறுதியில் என்

கல்லறையில் எழுதினாள்

இவன்

காதலுக்காக காவு

வாங்கப்பட்டவன் என்று !…


புரிந்துகொள்ள


ஜென்மம் பல கோடி வேண்டுமடி

உன் மௌன மொழிகளை

புரிந்துகொள்ள !


ஆயிரம் தலை ராவணன் வந்தாலும்

கடினமடி உன் கடை கண் பார்வைவை

புரிந்துகொள்ள ! …

நினைத்தாலே இனிக்கும்


உறைந்த நிலா

உலராத மேகங்கள்

உறவாடிய நேரங்கள்

கரைந்த மணித்துளிகள்

களவாடிய இதயங்கள்

கட்டுண்ட எண்ணங்கள்

ஓடிய வருடங்கள்

வாடாத நினைவுகள்

எல்லாம் ஒரு

கானல் நீராய் ! …

அசைவுகள் அலைகளாய்

உன் கண் இமைகள்

மோதும் போது

கடலும்

ஆர்ப்பரிக்கின்றன

அலைகளாய் !

உன்னால் !…

என்னுள்

வேதியியல் மாற்றங்களை

உணர வைத்தாய்யடி! 



ஒரு முறை பார்த்ததிற்கே

என் இதயத்தை

ஓர் ஆயிரம் முறை புரட்டி விட்டாய்யடி ! 


உறங்க நினைக்கும் விழிகளைகூட

கட்டுப்படுத்தி வைத்தாய்யடி!

இவை அனைத்தும் உன் முதல்

பார்வையால் !


வெட்கம்

உன்னை நினைத்து

எழுத தொடக்கினேன்

கவிதையும் வர மறுக்கிறது ! 



எழுத்துக்களுக்கும்

வெட்கமாம்

வர்ணிக்கப் போவதும் இன்னொரு

கவிதை என்பதால் !…


நான் விலகி நடக்கிறேன்

உன் காலடிச் சுவடுகளைக்

கூட தொடர மனமில்லையடி

ஏனென்றால்

உன் பாதம் பட்டு

பூரித்த மலர்களை

எங்கே நான் காயப்படுத்தி

விடுவேனோ

என்ற கவலையில்!…



மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

நீ நாணி,குறுகி

தலை குனிந்து நெளியும்

போது கீழ் வானமும் சிவக்கிறது

வெட்கப்பட்டு! 



ஒற்றையடி பாதையில்

கருப்பு சல்வாரில்

ஒற்றை ரோஜாவாய்

நீ செல்லும் போது

பாதையும் மெய் மறந்து

ரசிக்கிறது

செல்லும் திசை தெரியாமல் !


படைத்தவனையே

பதம் பார்க்க துடிக்கும்

பஞ்சலோக சிலையடி

நீ !… 


இயற்கையையே

புரட்டி போட துடிக்கும்

எழில் மங்கை

நீ !… 


இதில் நான் மட்டும்

எம்மாத்திரம் ! …


என்னை மறந்து தொலைந்து போகிறேன் ! …

தினமும்

உன் அழகைக் கண்டு

நிலைக் கண்ணாடியும்

நொருங்கித் துடிக்கிறது ! 



தினமும்

உன்னைக் காண

நாள்காட்டியும்

ஓடாய்த் தேய்கிறது ! 


உன்னை நினைத்து

கடிகார முட்களும்

சுற்றிச் சுற்றி

களைக்கிறது ! 


நீ உறங்கும்

நேரத்தில் நட்சச்திரமும்

கண் சிமிட்டி

ரசிக்கிறது ! 


இவை கிறுக்கல்களாய்

என்னை மறந்து

உன்னை நினைத்த

வேளையில் !…

என் அருகில் நீ வேண்டும்

ஏழு வண்ணங்களில் நீ வேண்டும்

என்றும் மறையாத

வானவில்லாய் ! 



இடி, மின்னல் போன்ற

மேள தாளங்களுடன்

நீ வேண்டும்

அழையாத மழையாய் ! 


விடியாத இரவில்

முடியாத கனவாய்

நீ வேண்டும்! 


முடியாத தொடராய்

நீ வேண்டும்

என்றும்

என் அருகில் !… 


என்னவளின் காதல்

உன்னைக் காணத் துடிக்கும்

விழிகளை உறங்க விட

மறுப்பததேனடி! 


உன்னை உச்சரிக்க துடிக்கும்

உதடுகளை ஊமைகள் ஆக்க

துடிப்பதேனடி! 

உன்னைச் சுமக்க நினைக்கும்

இதயத்திற்கு உன் நினைவுகளைக்

கூடத்தர மறுப்பததேனடி!


நம்பிக்கை தான் பாஸ் வாழ்கை!…


இது வெறும் கதை அல்ல. ஒரு ரசிகனின் குமுறல்….

கிரிகெட் விளையாட தெருத் தெருவாக திரிந்த நாட்கள் தான் அதிகம். பரீட்சை நேரத்தில கிரிகெட் பார்த்து கோட்டை விட்டது தான் மிட்சம்.

இந்தியா தோற்ற போது உடைத்த பொருளுக்காக அப்பா அடித்த அடியை விட இந்தியா தோற்ற வலி தான் அதிகம்.

கிரிகெட் Player-காக வக்காலத்து வாங்கி வாங்கி வாய் வலித்தது தான் மிட்சம்.

அடுத்த Match win , இந்த Match win அப்படி வெறும் ஏமாற்றதுடன் வாழ்ந்த நாட்கள் தான் அதிகம்.

இப்படி ரொம்ப matter இருந்தாலும் அடுத்த Match WIN பண்ணுவோம்-nu நம்பிக்கையில் கிரிகெட் மேல உள்ள ஒரு மோகத்தில் ஒரு அடிமட்ட 

ரசிகனாய் என்றென்றும் நான்.

Dhoniயும் கிரிக்கெட்யும்

Dhoni அன்போட ரசிகன் நான் நான் எழுதும் Letter..

 ச்சி.. மடல்.. இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா? இல்ல கடிதமே இருக்கட்டும்..
 எங்க படி..

Dhoni அன்போடு ரசிகன் நான் எழுதும் கடிதமே..

பாட்டாவே படுச்சிட்டியா?

அப்ப நானும்.. மொதல்ல Dhoni சொன்னல..

இங்க MSD போட்டுக்க.. MSD நம்ம Team-ல எல்லாரும் சௌக்கியமா?

நாங்க இங்க சௌக்கியம்..

MSD
 நம்ம Team-ல எல்லாரும் சௌக்கியமா? நாங்க இங்கு சௌக்யமே..


உங்களை நெனச்சு Match பாக்கும்போது கவலை மனசுல அருவி மாதிரி 

கொட்டுது ஆனா Match பார்க்க ஒக்காந்தா கண்ணீர் முட்டுது…

உங்களை எண்ணி Match பார்க்கணும்னு நினைக்கையில் கவலை கொட்டுது..

அத்தான்..

Match பார்கையில் கண்ணீர் முட்டுது..

அத்தேதான்..

அஹ ஹ.. பிரமாதம்.. Cricket Match ! … Cricket Match .. படி..

Dhoni  அன்போடு ரசிகன் நான் எழுதும் கடிதமே…

MSD நம்ம Team-ல எல்லாரும் சௌக்கியமா? நாங்க இங்கு சௌக்யமே..

உங்களை எண்ணி Match பார்க்கணும்னு நினைக்கையில் கவலை கொட்டுது..

Match பார்கையில் கண்ணீர் முட்டுது..

Dhoni  அன்போடு ரசிகன் நான் எழுதும் கடிதமே…

MSD நம்ம Team-ல எல்லாரும் சௌக்கியமா? நாங்க இங்கு சௌக்யமே..

எங்களுக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும் அது என்னவோ 

தெரியல என்ன மாயமோ தெரியல..

எங்களுக்கு ஒன்னுமே ஆவரது இல்ல..

இதையும் எழுதிக்கோ..

நடுல நடுல Ganguly , Sachin, Dravid இதெல்லாம் போட்டுக்கணும்..

தோ பாரு எங்களுக்கு என்ன காயம்னாலும் ஒடம்பு தாங்கிடும் உங்க உடம்பு 
தாங்குமா??

தாங்காது..

Dhoni Dhoni Dhoni ..

அதையும் எழுதணுமா??

அது.. Cricket .. எங்க Cricket …  எங்க Dhoni Cricket …

என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நா அழுது என் 

சோகம் உன்னை தாக்கி அது Matchயை பாதிக்கும் -

அப்படினு நெனைக்கும்போது வர அழுக கூட நின்னுடுது..

மனிதர் உணர்ந்துகொள்ள இது சாதாரண விளையாட்டு அல்ல.. .. 

அதையும்தாண்டி புனிதமானது.. புனிதமானது.. புனிதமானது.. புனிதமானது..

உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப்போன மாயம் என்ன பொன்மானே 
பொன்மானே..

என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கி கொள்ளும் உந்தன் மேனி 
தாங்காது செந்தேனே..

Cricket மேல் உள்ள காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது..

எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது..

மனிதர் உணர்ந்து கொள்ள, இது சாதாரண விளையாட்டு அல்ல..

அதையும் தாண்டி புனிதமானது..

Dhoniயே Cricket சாமியே நீதானே தெரியுமா?

Dhoniயே Cricket-ல் நீயும் பாதியே அதுவும் மற்றவர்களுக்கு புரியுமா?

சுப லாலி லாலியே லாலி லாலியே அபிராமி லாலியே லாலி லாலியே..

Dhoniயே World Cup வாங்கி தந்த சாமியே நீதானே தெரியுமா? மற்றவர்களுக்கு புரியுமா?




வசந்தகாலமாய் என்னவள்

அரும்புகளாய்த் துளிக்கிறாய் !

மலர்களாய் பூத்துக் குலுங்குகிறாய் !

பசுமையாய் கொழிக்கிறாய் !

தென்றலாய் சீண்டுகிறாய் !

சாரலாய் நனைக்கிறாய் !

வனத்தையே மயக்குகிறாய் !

வசந்தகாலமாய் என்னவள்

என்றுமே என்னுடன் !….

வறுமைக் காதல்

கட்டிக் கொடுத்த பெரியவளோ கால் பவுனு

கல் வைச்ச முக்குத்தி

கேட்டு வந்து மாசம் ஆறாக ! 



இளையவளோ சீமக்கார மவராசன்

கைப் பிடிச்சுக் கரைசேர காத்திருக்க ! 


சின்னவளோ தாய்மாமன் சீர் நோக்கி

பச்சை குடில் தேடி படர்ந்திருக்க ! 


மேட்டுக்காட்டில் விதைச்ச நெல்லோ

வறட்சியிலும் வானம் பாத்து பல் இளிக்க ! 


காப்படி கஞ்சிக்கே கால் வருஷம் காத்திருக்க ! 


எனக்கு வாக்கப்பட்டு வந்து

வாழுந்து முடிச்சு என்னை பாதியிலே

விட்டு போனவளுக்கு

படையல் வைக்க பச்சக்கண்ணாடி

வளையல் தேடி மீதி உயிரும் போனதென்னோ !


என்னருகில் நீ

நீ அருகில் பயணிப்பதால்

என்னவோ

தொலை தூரப் பயணம் கூட

தொலைந்தே போகிறது

வினாடிகளாய் ! 



உன் கூந்தலில் குடியேறுவதால்

என்னவோ

மல்லிகைக்கும் மதம் பிடித்து

மணக்கிறது ! 


காற்றுக்கும் வாசம் உண்டு

என்பதை உணர்கிறேனடி

உன்னைத் தீண்டி

அது என்னைக்

கடக்கும் போது ! 


ஒற்றைத் துளியென்றாலும்

என்னை நனைக்கிறாய்யடி

சாரலாய் என்றென்றும் !…




என் தோழியாய்

என் வாழ்க்கைப் பயணத்தில்

விடிவெள்ளியாய் நீ வேண்டும் ! 

ஓடும் நதியிலும் என்னைத் தீண்டும்

கரையாய் நீ வேண்டும் !

கொடி என்றாலும் என்னை ஊண்றிப்

பிடிக்கும் ஆனி வேராய் நீ வேண்டும் !

கொட்டும் மழையிலும் உடன் நனையும்

தோழியாய் நீ வேண்டும் !

இடர்பாடுகளுக்குக் இடையில் இளைப்பார

என்றென்றும் நீ வேண்டும்

என் தோழியாய் !



திருமணம்

காலைப் பொழுதில் கதிரவன் கண் சிமிட்ட

பஞ்ச பூதங்களே பந்தத்திற்கு சாட்சியாக

மணப்பந்தலிட்டு மங்கல வாத்தியம் முழங்க

உற்றாறும் உறவினரும் மலர்த் தூவி வாழ்த்த

பாசத்தையும் நேசத்தையும் நாண் மங்களமாக்கி

நாற்பண்புகளையே இயற்பண்புகளாய் கொண்ட

காப்பியத் தலைவிக்கு, காவியத் தலைவன்

சூடும் அழகிய தருணம் இந்தத்திருமணம்



அன்னைக்காக…

கருவறையிலேயே உதைத்த உன்னை

உச்சி முகர்ந்தெடுத்து முதன் முதலாய்

முத்தமிட்டு வரவேற்றவள் நீ ! 



நான் நடைபயில என்னைத் தாங்கிப்

பிடிக்க அதிக முறை விழுந்தவள் நீ ! 


என் காயங்களுக்கு உன் கண்ணீரால்

மருந்திட்டு நான் சிந்திய இரத்தத்தையே

மலிவாக்கி விட்டாயடி ! 


படிப்பு வாசணையே இல்லாத நீ

நான் பட்டம் வாங்கி வர

பருத்திப் பஞ்சாய் போனதென்னோ ! 


ஐந்துக்கும் பத்துக்கும் கீரை வித்து

அதை கடுகு டப்பியில் போட்டு வைச்சு

ஐணூறுயாக்கிக் கொடுத்த பணத்தோட

வாசம் இன்னும் போகலையே ! 


பத்து மாதம் சுமந்ததிற்கே பல

கோடி ஜென்மத்திற்கும் என்னை

கடன்காரன் ஆக்கிப்புட்ட ! 


கோடி முறை பிறந்தாலும் – உன்

காலடியில் வளரும் பாக்கியம் மட்டும்

போதுமடி மீண்டும் உன் மடியில் தவழும்

மழலையாய் !…


மானசிக காதலி…

நீ பூமியில் பிறந்ததால் என்னவோ

தன்னிலை மறந்தே சுற்றுகிறது பூமியும் ! 


நீ பறந்து விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ

வலை வீசியே காத்திருக்கிறது வானமும் ! 


நீ உன்னை ரசிக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ

உன்னைப் பிரதிபலித்தே செல்கிறது நிலவும் ! 


உனது காலடிச் சுவடுகளையாவது பதிக்க

துடிதுடித்துக் கிடக்கிறது பாதையும் !

வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவளே ! 


என் வாழ்நாள் முடியும் வரை மட்டும்

என்னோடு இருந்து விடு என் மானசிக காதலியாய் !…

கால் கொலுசு


சுள்ளி பொறுக்க வந்தவளே

என்னை

சுண்டி இழுக்குதடி உன் கால் கொலுசும்

உன் விரல் பட்டு 


விறகாகவே காத்திருந்தேனோ

இந்தக் கள்ளிக்காட்டில்


கருவாச்சி


பனை ஓலைப் பழுப்பழகி

தென்னைங் குருத்து கழுத்தழகி

கம்பங்காட்டு கண்ணழகி

கருப்பட்டி முகழகி

உன் ஓரக்கண் பார்வைக்கு

என் மனசும் பருத்தி பஞ்சாய் 


வெடிச்சதென்னோ !...


நினைவுகள்

முன்னோக்கிச் செல்லும் பயணங்களிலும்

பின்னோக்கியே செல்கிறது உன்னுடன்

உறவாடிய நிகழ்வுகளும் நினைவுகளும் ! 


செல்லும் பாதையெல்லாம் தேடிக்கொண்டு

இருக்கிறேன் என்னவளின் பிம்பங்களையும்

காலடிச் சுவடுகளையும் ! 


இதயம் என்னுளே பதிர்ந்திருந்தாலும்

உனக்காகவே துடித்துக் கொண்டிருக்கிறது ! 

இப்படிக்கு 

ஒவ்வொரு முறையும் உன்

நினைவுகளையே கைகோர்த்து செல்லும்

நான்



உணர்வுகள்

கடற்கரைகுத் தான் புரியும்

கடல் அலையின் பிரிவு !

காம்புகளுக்குத் தான்

புரியும் மலரின் வாட்டம் !

நட்சத்திரங்களுக்குத் தான்

வலிக்கும் நிலவின் பிரிவு !

என்னவளே…

உனக்கு மட்டும் தான்

தெரியும் என் காதலின்

வலிகளும் அதன் ரணங்களும்

பின்பு ஏனடி அதை மட்டும்

உணர மறுக்கின்றாய் !





எனது தேசம் – வரமா இல்லை சாபமா !…



பாரதி கண்ட கனவு தேசம்
களவு தேசமாய் கரு மாறிக்கொண்டிருக்கிறது !

தண்ணீர் தேசம் கண்ணீர் தேசமாய்
உருமாறிக் கொண்டிருக்கிறது !

மரங்களை வெட்டி வெட்டி
மனிதர்களை வெட்ட பழகிக் கொண்டோம் !

மனிதாபிமானம் மலிவு விலையில்
மண்புழுவாய் நெளிந்து கொண்டிருக்கிறது !

இளைய சமுதாயம் கேளிக்கைகளிலும்
ஆடம்பரங்களிலும் ஆர்பரித்துக் கொண்டிருக்கிறது !

நடைமுறையை மறந்து தலைமுறைக்காக சொத்து
சேர்த்துக் காசுக்காக கடவுளையே கடைத் தெருவில்
விற்றுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் !

பசியும் பட்டினியும் தான் என்
மக்களின் வரமா இல்லை சாபமா !

செந்நீர் சிந்தித் தான் இக்கண்ணீர் 
தேசத்தை களையெடுக்க வேண்டுமா !

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...