Monday, December 03, 2012

எனது தேசம் – வரமா இல்லை சாபமா !…



பாரதி கண்ட கனவு தேசம்
களவு தேசமாய் கரு மாறிக்கொண்டிருக்கிறது !

தண்ணீர் தேசம் கண்ணீர் தேசமாய்
உருமாறிக் கொண்டிருக்கிறது !

மரங்களை வெட்டி வெட்டி
மனிதர்களை வெட்ட பழகிக் கொண்டோம் !

மனிதாபிமானம் மலிவு விலையில்
மண்புழுவாய் நெளிந்து கொண்டிருக்கிறது !

இளைய சமுதாயம் கேளிக்கைகளிலும்
ஆடம்பரங்களிலும் ஆர்பரித்துக் கொண்டிருக்கிறது !

நடைமுறையை மறந்து தலைமுறைக்காக சொத்து
சேர்த்துக் காசுக்காக கடவுளையே கடைத் தெருவில்
விற்றுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் !

பசியும் பட்டினியும் தான் என்
மக்களின் வரமா இல்லை சாபமா !

செந்நீர் சிந்தித் தான் இக்கண்ணீர் 
தேசத்தை களையெடுக்க வேண்டுமா !

No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...